கடந்த முறை இந்தியா சென்றிருந்த போது சில வேடிக்கையான கேள்விகளை சந்தித்தேன். அதில் சில இங்கே:
1. நீ நியூ யார்க்கில் இருக்கியாமே....பக்கத்துல அரிசோனாவில தான் கீதாவோட தம்பி வேல பாக்குறான். போய் பாத்துட்டு வா...என்ன?- அது என்னவோ R .S . புறம் -பாப்பம்பட்டி தூரம் என்று நினைத்திருப்பார் போலும். நானும் சரி என்று தலை ஆட்டி வைத்தேன் (எத்தனை பேருக்கு தான் US map -ஐ விவரிக்க
முடியும்? ).
2. அங்க இங்க மாதிரி தான் சாப்பாடா? (எனது வெள்ளைக்கார நண்பர் ரசம் குடித்து விட்டு அலறிய அலறல் மனக்கண்ணில் வந்து போனது....ஏற்கனவே இதை 16 பேரிடம் சொல்லி விட்டேன். இவரை விட்டு விடலாமே....கனகபுரம் மாதிரி தான் ஊர் உலகம் எல்லாம் என்று நினைப்பவர்களில் இவறும் ஒருவர் ).
3.அங்க பெரிய பாட்டில் சரக்கெல்லாம் பொண்ணுகளுக்கு குடுக்க மாட்டாங்களா? (Wine சாக்லேட் கொடுத்ததற்கு எதிர் கொண்ட கேள்வி இது.)
4.அங்க சென்ட் பாட்டில் எல்லாம் ரொம்ப விலை கொறச்சலாமே? ஆளுக்கு ரெண்டு வாங்கி வந்திருக்கலாமே...(Calvin Klein $80- மிக விலை மலிவு என நினைப்பவர்.)
5.நீ மருந்து கம்பெனில விஞ்ஞானியாமே? எங்க சொந்தகார பையன் கூட அமெரிக்காவுல விஞ்ஞானியா தான்.. வருஷம் ஏழு கோடி சம்பாதிக்கறான்...உனக்கும் அவ்ளோ வருமா? (அய்யா...அது எந்த கம்பெனி-னு கொஞ்சம் சொல்லுங்களேன். நானும் ஒரே வருஷத்ல சம்பாதிச்சிட்டு இந்தியாவுல செட்டில் ஆயிடறேன்.)
6. என் பேரன் USல கம்ப்யூட்டர் கம்பெனில தான் வேலை பாக்குறான்....என்னவோ விசிடாம் (onsite visit) மாசம் ஏழு லட்சம் சம்பளம் (அது என்ன ஏழு ராசி நம்பர்-ஆ?)....எல்லாம் எம் பேருக்கு தான் அனுப்புறான். அவன் பேர்ல எடம் வாங்கினது போக மிச்சத்தை கல்யாணத்துக்கு சேத்தி வெச்சிருக்கேன் -( அப்படியா? அப்புறம் ஏன் onsite visit நண்பர்கள் எல்லாம், என் grocery bill-a அவங்க கணக்குல காட்ட வாங்கிட்டு போறாங்க?)
உண்மை நிலவரம்: இங்கு onsite visit வரும் சில நான்பர்களுக்கு அவர்கள் வேலை செய்யும் கம்பெனி இந்திய அக்கௌன்ட்-க்கு வழக்கம் போல் சம்பளம் அனுப்பி விடுமாம். US-il தங்கும் செலவுக்கு மட்டும் தான் கம்பெனி பணம் கொடுக்குமாம். எல்லா கம்பெனி-உம் இப்படித் தானா என்று தெரியவில்லை. ஆனால் விவரம் சொன்ன நண்பர் நம்பகூடியவர்.
7.நீ அமெரிக்காவுல இருக்கியா? இங்க பகல்னா அங்க ராத்திரி தானே? (நான் புரியாமல் அம்மாவை பார்க்க....அம்மா காதில் கிசுகிசுத்தார்...அவரும் அமெரிக்கா பத்தி கேள்வி பட்டிருகாறாம்...அதை தான் அப்படி சொல்லுறார்........ssssss அப்பா முடியலடா சாமி).
No comments:
Post a Comment