இள வயதில் இலக்கிய சூழல் பெரிய அளவில் எனக்கு வாய்க்கவில்லை என்ற ஆதங்கம் எனக்கு இப்பொழுதும் உண்டு. எனது வீட்டருகில் குடியிருந்த ஆங்கில ஆசிரியை முறையான ஆங்கில இலக்கியத்தை அறிமுகப்படுத்தினார். ஆனால் தமிழ் இலக்கியம் பற்றிய சிந்தனை அப்பொழுது எனக்கு இல்லை. சங்க கால இலக்கியங்கள் தவிர வேறு ஒன்று தமிழில் இருப்பதாகவே தோன்றியதில்லை. பொன்னியின் செல்வன் தவிர நான் வாசித்த தமிழ் புத்தகங்களும் மிகவும் குறைவு. நவீன இலக்கியங்களோ
அவ்வளவு சுவாரசியத்தை ஊட்டவில்லை- அந்த சமயத்தில் அது நவீன இலக்கியத்தின் கோளாறா அல்லது எனது புரிதலுக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் எனக்கிருந்த ஈடுபாடின்மையா என புரியவில்லை, நான் முயற்சிக்கவுமில்லை. பொறியியல் படிப்பில் இளங்கலை முடித்தபின், இனி என்ன என எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருந்த பொழுது, செல்வி அக்காவின் பரிச்சயம் ஏற்பட்டது. அழகான நட்பு அது- தமிழ் இலக்கியம் பற்றியும் சமுதாய தாக்கங்கள் பற்றியும் நேரம் மறந்து பரிமாரிக் கொள்ளும் நட்பு. அந்த வயதில் அடையாளத்தை தேடிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் கட்டுண்டுந்திருந்த எனக்கு அந்த நட்பு நிதானத்தை கொடுத்தது. வாழ்வின் அழகியலை அழகாக எடுத்துரைத்தது.

பின்பு அமெரிக்காவில் மேற்படிப்பை தொடர்ந்த பொழுது, தொலைதூர நட்பு எங்களுக்குள் நீண்ட இடைவெளியை ஏற்படுத்தியது. திருமணம், பின்பு அது கொடுத்த வாழ்வாதாரத்தை பற்றிய கவலை எங்களது நட்பை சற்று அதிகமாகவே பரிசோதித்து பார்த்தது. ஆனால் செல்வி அக்கா அறிமுகப் படுத்திய இலக்கியம் இன்னும் என்னுடன் பயணித்துக் கொண்டு தான் இருக்கிறது. முன்பு இருந்த வேகம் இல்லை ஆனால் பயணம் தொடர்கிறது. இன்றும் கூட அமர்ந்து பேச வாய்ப்பு கிடைத்தால், அந்த பகிர்தலும் அது கொடுக்கும் பரவசமும் எங்களுக்குள் மீண்டும் ஊற்றெடுக்கும். கால வெள்ளம் எல்லாவற்றையும் அடித்து செல்வதில்லை, சில நினைவுகளை கரையோரம் ஒதுக்கி விட்டு தான் செல்கிறது.